'தமிழகத்தில் செயல்படாத ஆட்சியை அகற்ற வேண்டும்' | சேலம் செய்திகள் | Dinamalar
'தமிழகத்தில் செயல்படாத ஆட்சியை அகற்ற வேண்டும்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2019
08:25

சேலம்: ''செயல்படாத ஆட்சியை அகற்ற, மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்,'' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் பேசினார். சேலம் மத்திய மாவட்ட பகுதி, தி.மு.க., சார்பில், கட்சி பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், தாதகாப்பட்டியில், நேற்று நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர், தீர்மானக்குழு தலைவர் பொன்.முத்துராமலிங்கம் பேசியதாவது: மத்திய அரசின் திட்டங்களுக்கு, தமிழக அரசு, சிவப்பு கம்பளம் விரிக்கிறது. 'நீட்' தேர்வால், தமிழகத்தில் எந்த பலனும் இல்லை. மருத்துவ கல்லூரிகள் அதிகம் இருப்பதால், வெளிமாநிலத்தவரை, தமிழகத்துக்கு கொண்டு வர, 'நீட்' தேர்வு. அரசியல் ரீதியாக அச்சுறுத்தவும், சாதகமானவர்களை பயன்படுத்திக்கொள்ளவே, மத்திய அரசு, 'ரெய்டு' நடக்கிறது. இதுவரை நடந்த பல ரெய்டுகளின் முடிவு தெரியவில்லை. தமிழகத்தில், செயல்படாத ஆட்சியை அகற்ற, மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். அப்போதுதான், நிலைமை மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X