ஓமலூர்: விமான நிலையத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். சேலம், தர்மபுரி மாவட்டங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னையிலிருந்து, விமானம் மூலம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று காலை, சேலம் வந்தார். அவருக்கு, மாவட்ட செயலர்கள் ராஜேந்திரன், சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜா, தேர்தல் பணிக்குழு செயலர் செல்வகணபதி உள்பட, கட்சி நிர்வாகிகள், மலர் கொத்து வழங்கி வரவேற்றனர்.