காவலாளி கொலையில் 'திடுக்': 3 வாலிபர்களுக்கு காப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
காவலாளி கொலையில் 'திடுக்': 3 வாலிபர்களுக்கு காப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2019
08:27

சேலம்: இரவு நேர காவலாளி கொலை வழக்கில், மூன்று வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.


சேலம், சீலநாயக்கன்பட்டி, சுபாஷ் சந்திர போஸ் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி, 75. இவருக்கு, பாப்பாத்தி, 74, சரஸ்வதி, 60, சாந்தி, 54, என, மூன்று மனைவிகள் உள்ளனர். தற்போது, மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்தார். அங்குள்ள ஊத்துக்காடு, இரும்பு குடோனில், இரவு காவலாளியாக வேலை பார்த்த ராமசாமி, கடந்த, 14 இரவு, பணியின்போது, கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, நேற்று, சாந்தியின் மகன் பிரதாப், 31, வெடிப்புக்கல்பாறையைச் சேர்ந்த அப்துல்லா மகன் அப்துல்ரஹ்மான், 26, கிச்சிப்பாளையம், வரதராஜன் தெரு, சென்னையன் மகன் பிரபு, 30, ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சாந்தி, முதல் கணவரை பிரிந்து, இரண்டாவதாக ராமசாமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். சாந்தியின் முதல் கணவருக்கு பிறந்தவர் பிரதாப் என்பதால், அவரை, ராமசாமி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதுதொடர்பாக, அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை, தன் முதலாளியான, பெயின்டிங் ஒப்பந்ததாரர் பிரபுவிடம், பிரதாப் முறையிட்டுள்ளார். பின், சக தொழிலாளி அப்துல்ரஹ்மானுடன் சேர்ந்து, ராமசாமியை தீர்த்துக்கட்டியுள்ளார். பிரபு, மூளையாக செயல்பட்டு, தீட்டிய திட்டப்படி, கொலை நடந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X