குறிச்சியில் குப்பைக்கு பஞ்சமில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
22:59

சாலை நடுவில் மண் குன்றுதாளியூர் பேரூராட்சி, கலிக்கநாயக்கன்பாளை யத்தில், சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணியின் போது, குவிக்கப்பட்ட மண், பணி முடிந்து நீண்ட நாளாகியும் அப்புறப்படுத்தாமல், சாலையின் நடுவில் குவிக்கப்பட்டுள்ளது; போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.- சண்முகவேல், கலிக்கநாயக்கன்பாளையம்.

பாதியில் நிற்குது சாலை பணிநீலாம்பூர் - வெள்ளானைப்பட்டி ரோடு சீரமைக்கும் பணி, பாதியில் நிறுத்தப்பட்டதால், சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. கடந்த, 5 மாதங்களாக இச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.- மகேந்திரன், வெள்ளானைப்பட்டி.

சுகாதார சீர்கேடுவெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால் பாளையத்தில், குடியிருப்புகளுக்கு மத்தியில் குவிந்துள்ள குப்பை, முறையாக அள்ளப்படுவதில்லை; பன்றித்தொல்லையும் அதிகரித்துள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-வேலுமணி,

நிரம்பி வழியுது குப்பை தொட்டிகணபதி, போலீஸ் குடியிருப்பு, தங்கம் ஸ்டோர்ஸ் எதிரில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இப்பகுதிக்கு சுகாதார பணியாளர்கள் வராததால், குப்பை தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.-கலைவாணன், போலீஸ் குடியிருப்பு.

குறிச்சியில்குப்பைக்கு பஞ்சமில்லைகுறிச்சி, பெருமாள் கோவிலில் இருந்து, மாச்சம்பாளையம் செல்லும், கல்லுக்குழி ரோட்டில், என்.ஆர்.பி., மருத்துவமனை திருப்பத்தில், குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது.- சங்கர், பூங்கா நகர்.

குளத்துக்கு நீர் செல்வதில் சிக்கல்போத்தனுார் அருகே நஞ்சுண்டாபுரத்தில் நொய்யல் ஆற்றுநீர், சிங்காநல்லுார் குளத்துக்கு செல்லும் வாய்க்கால் புதர்மண்டிக் கிடக்கிறது; துார்வார வேண்டும்.- கருணாமூர்த்தி, நஞ்சுண்டாபுரம்.

சாக்கடை கால்வாய் வசதியில்லைவேலாண்டிபாளையம், அண்ணா நகரில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், சாலையில் தேங்கியுள்ளது.- சுப்ரமணி, அண்ணா நகர்.

குடிநீர் வினியோகத்தில் குளறுபடிஒண்டிப்புதுார் அருகே பட்டணம் பகுதியில், குடிநீர் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. குடிநீருடன், போர்வெல் நீரும் கலந்து வினியோகிப்பதால், குடிநீர் இன்றி, மக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.- செல்வராஜ், பட்டணம்.

சாலையில் தேங்குது கழிவுநீர்அவிநாசி ரோடு, அண்ணாதுரை சிலை, தாமோதரர் சென்டர் முன்புறம், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.- கொங்குவேல், காந்திபுரம்.

செல்வம் நகரில் மூச்சுத் திணறல்பாலக்காடு ரோடு, குனியமுத்துார், செல்வம் நகரில், சாலையோரம் குவியும் குப்பை, அகற்றப்படாமல், அங்கேயே தீ வைத்து கொளுத்துகின்றனர். பல்வேறு கழிவுகள் எரிந்து, மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.- நிர்மலா, செல்வம் நகர்.விளக்கு எரிவதில்லைபோத்தனுார், சாரதா மில் ரோட்டில் உள்ள, பல் மருத்துவமனை அருகே, தெருவிளக்குகள் எரிவதில்லை.-மாணிக்கம், சாரதாமில் ரோடு.

சாலையை செப்பனிடணும்வடவள்ளி, ஜெய்ஸி பள்ளி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. சிறிது நேரம் மழை பெய்தால் கூட, சேறும் சகதியாக மாறி விடுகிறது; பள்ளி குழந்தைகள் அவதிப்படுகின்றனர். இச்சாலையை செப்பனிட வேண்டும்.- பழனி, வடவள்ளி.

குழியால் தொல்லைபோக்குவரத்து அதிகம் உள்ள, அவிநாசி ரோடு, சிட்ரா - காளப்பட்டி ரோட்டில், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- சாமிநாதன், நேரு நகர்.

விளக்கு எரிவதில்லைவரதராஜபுரம் மேடு, நீலிக்கோணாம்பாளையம் ரோடு, கோணவாய் நாயக்கர் வீதி-2ல் உள்ள, மின் கம்பத்தில், விளக்கு எரிவதில்லை.-ஈஸ்வரமூர்த்தி, கோணவாய் நாயக்கர் வீதி.

நாய் தொல்லை அதிகரிப்புகாளப்பட்டி ரோடு, நேரு நகர், ஜானகி அம்மாள் லே-அவுட்டில், நாய் தொல்லை அதிகரித்துள்ளது; சாலையில் செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. மக்கள் அச்சப்படுகின்றனர்.- அர்ஜுன், நேரு நகர்.

விளக்கு எரிவதில்லைசாய்பாபா காலனி, ராமசாமி வீதியில் உள்ள, மின் கம்பத்தில் (எண்: 7) தெருவிளக்கு எரிவதில்லை.- ஜெகதீஸ்வரன்,ராமசாமி வீதி.

ஆபத்தான மரத்தை அகற்றணும்பீளமேடு, ஹட்கோ காலனி, பிளாக்-20ல், காய்ந்து விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஸ்ரீதர், ஹட்கோ காலனி.

நடைபாதை ஆக்கிரமிப்புசாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில், இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம் பர போர்டுகளால், பாதசாரிகள் நடக்க வழியின்றி, சாலையில் நடக்கின்றனர்.- முரளிகுமார், சாய்பாபா காலனி.

கொசுத்தொல்லைஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு எதிரே செட்டிபாளையம் ரோட்டில், எல் அண்ட் டி மருத்துவ மையம் செயல்படுகிறது. இதனருகே, கழிவு நீர் பல மாதங்களாக தேங்கியுள்ளது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.- சந்திரன், சீரபாளையம்.

குப்பை அள்ள ஆட்கள் வருவதில்லைஅவிநாசி ரோடு, கந்தசாமி லே-அவுட் பகுதிக்கு, துப்புரவு பணியாளர்கள் வராததால், சாலையோரம் குவிந்துள்ள குப்பை, மாதக்கணக்கில் அள்ளப்படாமல் உள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சம்பத்,

கந்தசாமி லே-அவுட்.

சிட்கோவில் சாக்கடை குளம்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, சிட்கோ ஏ6 தொழிற்பேட்டையில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது.- நாகராஜன், மதுக்கரை.

தேவையற்ற வேகத்தடைகள்மதுக்கரை மார்க்கெட் ரோடு - பொள்ளாச்சி ரோடு செல்லும் அண்ணா காலனி நேரு வீதியில் தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.-ஸ்ரீராம், நேரு நகர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X