வேடசந்துார் : வேடசந்துார் ஆர்.எச்., காலனியை சேர்ந்தவர் பெரியசாமி 45, திருமணமானவர். ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். நேற்று வேலை பார்க்கும் இடத்தில் மயங்கி விழுந்ததாக கூறி, வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அவர் உயிர் இழந்தது தெரிந்தது. 'பெரியசாமி மரணத்தில் மர்மம் இருப்பதாக' கூறி, உறவினர்கள் திடீர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். வேடசந்துார் போலீசார் பேசியதையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.