நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எல்.பி.ஜி எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் மாதிரி தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. காஸ் நிரப்பப்பட்ட கன்டெய்னர்களில் ஒத்திகை நடந்தது. சுகாதார இணை இயக்குனர் பூங்குழலி தலைமை வகித்தார். தீயணைப்புத் துறை ஆய்வாளர் ஜோசப், விளாம்பட்டி எஸ்.ஐ., அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.தொழிற்சாலை பணியாளர்கள் தீத்தடுப்பு ஒத்திகையை பார்வையிட்டனர். ஐ.ஓ.சி., துணை பொது மேலாளர் முரளி பங்கேற்றார்.