'எழில்மிகு கோவை' விரைவில் உருவாகும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2019
01:06

கோவை:கோவையில், தினமும், 850 டன் முதல், 1,100 டன் வரையிலான குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பை மேலாண்மையில் முக்கியத்துவம் செலுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகம் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில் 'எழில்மிகு கோவை' எனும் தலைப்பில், துாய்மை மற்றும் பசுமைக்கான மாற்றுத்தீர்வுகள் குறித்த கண்காட்சியை, கடந்த இரு நாட்கள் நடத்தியது. தொழில்நுட்ப நிறுவனங்கள், இயந்திர உற்பத்தியாளர்கள் என, 81 நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன.இயற்கை உரம் தயாரிப்பு இயந்திரங்கள், சமையல் கழிவு உரமாக்கும் தொழில்நுட்பம், மக்கும் குப்பையாக்கும் இயந்திரம், மழைநீர் சேகரிப்பு முறை, ஓட்டல் கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.கோவையில், அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் உட்பட, 100 கிலோவுக்கு அதிகமாக குப்பை உருவாக்குவோராக, 1,205 வளாகங்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு இருந்தது. அதில், 937 வளாகங்களை சேர்ந்தவர்கள், கண்காட்சியை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும், கழிவுகளை முறையாக அகற்ற, விழிப்புணர்வு ஏற்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X