கோவை:கோவை, வெரைட்டி ஹால் ரோடு போலீசார், நேற்று தாமஸ் வீதியில் உள்ள, 'ஹரியன் மார்க்கெட்டிங்' என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தினர். பெட்டிக்கடைகளுக்கு சில்லரை வியாபாரத்துக்கு சப்ளை செய்ய, 'பான்மசாலா' பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.நிறுவன 'சேல்ஸ்மேன்', தாமஸ் வீதியை சேர்ந்த யுவராஜ், 24, ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ், 27 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரிடம், பான்மசாலா சப்ளை செய்யப்படும் பெட்டிக்கடைகளின் விவரங்களை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.