ஒலிக்கத்துவங்கியது சரண கோஷம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2019
01:12

கோவை:கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று கோவில்களில், துளசி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் முதல் தேதியில் துளசி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலை செல்வது வழக்கம். நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.கோவையில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள், கோவிலுக்கு சென்று மாலை அணிந்து வந்தனர். ராம் நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஐயப்பா பூஜா சங்கம், நியூசித்தாபுதுாரில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில்களில், நேற்று அதிகாலை மண்டல பூஜை துவங்கியது. சிறப்பு பூஜைக்குபின், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.சுந்தராபுரம் அடுத்த குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மேல்சாந்தி சசிதிருமேனி, நடையை திறந்தார். தொடர்நது நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், பக்தர்களுக்கு மாலை அணிவித்தல் நடந்தது; 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.இதேபோல், நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஐயப்ப பக்தர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிந்தனர். சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால், கடைகளில் காவி, கருப்பு, நீல நிற வேஷ்டிகள், துண்டுகள், துளசி மணி மாலைகள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X