சூலுார்:கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம், 52. இவரது மனைவி தனலட்சுமி, 52. திருமணம் ஆன ஒரு மகளும், குருராகவ், 12, என்ற மகனும் இருந்தார்.சுய தொழில் செய்து வந்த முருகானந்தம், கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். மனமுடைந்த அவர், மனைவி மற்றும் மகனுடன், கடந்த, 11 ம்தேதி உடுமலைப்பேட்டை அடுத்த தளி பகுதியில், தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் வாய்க்காலில் குதித்துள்ளனர்.இதில், மனைவியும், மகனும் நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். முருகானந்தம் மட்டும் பிழைத்துக்கொண்டார். இந்நிலையில், குரு ராகவ்வின் சடலம், சுல்தான்பேட்டை அருகே மதகில் மிதந்தது. சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.