பெ.நா.பாளையம்:கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட குறு மையங்களுக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள், கே.பி.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்தன. இதில், 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இறுதிப் போட்டியில், என்.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை, 7- - 1 என்ற புள்ளி கணக்கிலும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், எஸ்.வி.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை, 16- - 7 என்ற புள்ளிக் கணக்கிலும், 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில், ஜி.ஆர்.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை, ஜி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தோற்கடித்தன.இது தவிர, 14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான ஹேண்ட்பால் போட்டியில் இரண்டாமிடத்தையும், 14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான போட்டியில், மூன்றாமிடத்தையும் பெற்றனர்.இதில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் கிருஷ்ணகுமார், முதல்வர் சித்ரா சவுந்திரராஜன், உடற்கல்வி இயக்குனர் அருள் உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்தினர்.