| பஸ் - லாரி மோதல் டிரைவர்கள் காயம்  Dinamalar
பஸ் - லாரி மோதல் டிரைவர்கள் காயம் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 நவ
2019
02:09

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் நேற்று காலை நடந்த விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.தடாகத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் நோக்கி, செங்கல் லோடுடன், லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன், தனியார் பஸ் கோவையை நோக்கி சென்றது.இரண்டு வாகனங்களும், மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் வித்யாலய கல்வி நிறுவனம் அருகே ஒன்றுடன், ஒன்று மோதின. இதில், லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இச்சம்பவத்தில் லாரி மற்றும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X