150 ஏக்கர் சர்க்கார் சாமக்குளத்திற்கு விடிவு! 10 கிராமம் இணைந்து களப்பணி துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2019
02:11

கோவில்பாளையம்:பத்து கிராம மக்கள் இணைந்து, 150 ஏக்கர் பரப்பளவு சர்க்கார் சாமக்குளத்தில் நேற்று களப்பணியை துவக்கினர்.எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியை அடுத்த கொண்டையம்பாளையம் ஊராட்சியில், 150 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. கொண்டையம்பாளையம் குளம் என்று அழைக்கப்படும் சர்க்கார் சாமக்குளத்தில், ஒரு சொட்டு நீர் கூட இல்லை.இந்த குளத்திற்கு மழை நீர் வரும் பாதைகள், அடைபட்டு கிடக்கின்றன. இந்த குளத்தை துார்வாரி, சீரமைக்கும் பணியை செய்ய, கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு அழைப்பு விடுத்தது.500க்கும் மேற்பட்டோர்... இந்த அழைப்பை ஏற்று, 10 அமைப்புகள் இந்த பணியில் இணைய சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து, கடந்த 11ம் தேதி பூமி பூஜை நடந்தது.இதை தொடர்ந்து, குளத்திலும் குளத்திற்கு நீர் வரும் பாதையிலும், ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று காலை 7:00 முதல் 9:00 மணி வரை, களப்பணி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.நேற்று காலையில், கொண்டையம்பாளையம், கோட்டைபாளையம், குரும்பபாளையம், கோவில்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கள்ளிப்பாளையம், வையம்பாளையம், அத்திப்பாளையம் கீரணத்தம், வெள்ளமடை ஆகிய, 10 கிராமங்களிலிருந்து, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் அங்கு திரண்டனர்.கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கே.ஜி.பாலசுந்தரம், ராக் அமைப்பு நிர்வாகி ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.விவசாயிகள், பொதுமக்கள் பேசுகையில், 'களப்பணிக்கு தேவையான பொக்லைன், இயந்திரங்களுக்கான வாடகையை ஏற்றுக் கொள்கிறோம். பழ மரக்கன்றுகள் வாங்கி தருகிறோம். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று வந்து களப்பணியில் ஈடுபடுகிறோம். எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த தொகை தருகிறோம்' என, ஆர்வமாக தெரிவித்தனர்.நீர் வழிப்பாதையில்...தன்னார்வலர்கள் பேசியதாவது:முதல் கட்டமாக, இந்த குளத்திற்கு மழை நீர் வரும் பாதையில் மண் மேடுகளை அகற்றி முழுமையாக சீரமைக்க உள்ளோம். அடுத்து குளத்திற்குள் உள்ள, சீமை கருவேல மரங்களை அகற்றுதல், குளத்தில் யாரும் குப்பைகளை கொட்டாதபடி தடை செய்தல், குளத்திற்குள் கழிவு நீர் வராமல் தடுத்தல் ஆகியவற்றிற்று முன்னுரிமை அளித்து செய்ய உள்ளோம்.அதற்கு அடுத்த கட்டமாக, குளத்திற்குள் மழை நீர் தேங்கும்படி குழிகள் அமைத்தல், கரைகளை பலப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளோம். இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று, காலை 7:00 முதல் 9:00 மணி வரை துார் வாரும் பணி நடக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.களப்பணியில், தன்னார்வலர்கள், விவசாயிகள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என பலரும் பங்கேற்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் மண் மேடுகள், புதர்கள், முற்செடிகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. முதல் களப்பணியில், 500 பேர் பங்கேற்றது அனைவருக்கும் உற்சாகத்தை தந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X