அதிகாரி மனைவி சாவு: கணவர் வீடு சூறை | அரியலூர் செய்திகள் | Dinamalar
அதிகாரி மனைவி சாவு: கணவர் வீடு சூறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 நவ
2019
06:29

அரியலூர்: அரியலூர், மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 28; பெரம்பலூர் மாவட்ட மின்வாரியத்தில் உதவி பொறியாளர். இவருக்கும், பொன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகா, 25, என்பவருக்கும், 2018ல் திருமணம் நடந்தது; குழந்தை இல்லை.தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, நேற்று காலை, 8:00 மணியளவில், கார்த்திகாவின் உறவினர்களுக்கு, பிரபாகரன் தகவல் தெரிவித்தார். ஆத்திரமடைந்த கார்த்திகாவின் உறவினர்கள், விரைந்து வந்து, சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, பிரபாகரனை அடித்து உதைத்ததுடன், அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி, சூறையாடினர். செந்துறை போலீசார், பிரபாகரனை மீட்டு, போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். கார்த்திகாவின் உடலை பொன்குடிக்காடு எடுத்து செல்வதாக கூறி, அவரது உறவினர்கள், லோடு ஆட்டோவில் ஏற்றினர். போலீசார் தடுத்து, உடலை மீட்டு, பரிசோதனைக்காக, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், கார்த்திகாவின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிதுநேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செந்துறை போலீசார் விசாரிக்கின்றனர். வரதட்சணை கொடுமையா என உடையார்பாளையம், ஆர்.டி.ஓ., பூங்கோதையும் விசாரிக்கிறார். மருவத்தூர் கிராமத்தில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X