சின்னாளபட்டி : என் பஞ்சம்பட்டி கோயில்களில் நடந்த தாக்குதல் தொடர்பாக, போலீசில் புகார் செய்ய மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
என் பஞ்சம்பட்டியில் உள்ள ஒரு கோயில் சூலாயுதத்தை நேற்று முன்தினம் சிலர் சேதப்படுத்தினர். இத்தகவல் வேகமாக பரவியதால், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டனர். நிர்வாகிகள் புகாரின் பேரில், அங்கு போலீசார் விசாரிப்பதாக தெரிவித்ததால் கலைந்தனர்.
இரவில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டதால், பரபரப்பு நிலவியது. இச்சூழலில், நேற்று அதிகாலை மற்றொரு கோயிலில் சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. சின்னாளபட்டி போலீசார், விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அடுத்தடுத்த சம்பவங்களால், இப்பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது.