திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால், பிரசவத்தின் போது தாய், குழந்தை இறந்ததாக குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காப்பட்டி அருகே தம்பக்குளத்துப் பட்டியைச் சேர்ந்த சின்னையா அளித்துள்ள மனு: எனது மகள் தமிழரசிக்கும், பெரியக்கோட்டை லட்சுமணனுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மூன்று வயது குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்திற்காக தமிழரசியை நவ.,10ல் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலில் பெண்குழந்தை பிறந்தது. சிறிதுநேரம் கழித்து குழந்தையும், தாயும் இறந்து விட்டதாக கூறினர். தவறான சிகச்சையால் இது நடந்துள்ளது.
பிரசவம் பார்த்த டாக்டர், நர்சு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.