வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே அங்கன்வாடி மையத்திற்கு பூமி பூஜை நடந்தது..கோம்பைப்பட்டி ஊராட்சி கீழக்கோவில்பட்டி அங்கன்வாடி மையக் கட்டிடம் ரூ 8.70 லட்சத்தில் கட்டப்பட உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. பி.டி.ஓ., க்கள் ஜெயச்சந்திரன், வேதா, முன்னாள் ஒன்றிய தலைவர் மோகன் முன்னிலை வகித்தனர். திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.