இருளில் உழவர் சந்தை பொதுமக்கள் திணறல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
இருளில் உழவர் சந்தை பொதுமக்கள் திணறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
02:15

திருப்பூர்:நான்கு மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால், தெற்கு உழவர் சந்தை முழுவதும் இருளில் முழ்கியது. மொபைல் போன் 'பிளாஷ் லைட்', மெழுகு வர்த்தி வெளிச்சம் விவசாயிகளுக்கு கைகொடுத்தது.திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை உள்ளது. அதிகாலை, 3:00 மணி முதல் காலை, 7:00 மணி வரை சந்தை நடக்கிறது.திங்கள்கிழமை வாரத்தின் முதல் நாள் விற்பனை களைகட்டும் என்பதால், விவசாயிகள் அதிகளவில் நேற்று கூடினர். சந்தை துவங்கி ஒரு மணி நேரத்தை கடந்தும், மின் வினியோகம் இல்லை. பொருட்களை விற்கும் விவசாயிகள், வாங்க வந்த வியாபாரிகள் வாடிக்கையாளர் தங்களது மொபைல் போன், 'பிளாஷ் லைட்' ஆன் செய்து, பயன்படுத்தினர்.இதனால், பல்லடம் ரோடு, சந்தை முன்புற வாயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஒரு மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. இதனால், 8:00 மணிக்கு நிறைவு பெற்றது. நள்ளிரவு, 1:00 மணிக்கு ஏற்பட்ட மின்வெட்டு எட்டு மணி நேரம் கழித்து, காலை, 8:00 மணிக்குத்தான் சீரானது.மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில்,' பல்லடம், 110 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து திருப்பூர் வரும் சப்ளை ஓயர் அறுந்து திடீரென தடைபட்டது. குமரன் ரோடு, சந்தைப்பேட்டை, வீரபாண்டி, குமார்நகர், நகரம் ஆகிய ஐந்து மின்நிலையத்துக்கான வினியோகம் தடைபட்டது. காலையில் சரி செய்யப்பட்டது,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X