ரூ.4.70 கோடிக்கு நலத்திட்ட உதவி: குறைகேட்பு கூட்டத்தில், வழங்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
02:17

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஐந்து வெவ்வேறு இடங்களில் நடந்த முதலமைச்சரின் சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில், 2,562 பயனாளிகளுக்கு, 4.70 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, வடக்கு, ஊத்துக்குளி, பல்லடம் மற்றும் பொங்கலுார் ஆகிய பகுதிகளில், முதலமைச்சரின் சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, கலெக்டர் விஜயகார்த்திகேயன், தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதன்படி, திருப்பூர் தெற்கு தாலுகாவில், 472 பயனாளிகளுக்கு, 65.01 லட்சம் ரூபாய்; திருப்பூர் வடக்கு தாலுகாவில், 726 பயனாளிகளுக்கு, 79.85 லட்சம் ரூபாய்; ஊத்துக்குளி தாலுகாவில், 397 பயனாளிகளுக்கு, 73.77 லட்சம் ரூபாய்; பல்லடத்தில், 445 பயனாளிகளுக்கு, 1.13 கோடி ரூபாய்; பொங்கலுாரில், 519 பயனாளிகளுக்கு, 1.39 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், விஜயகுமார், தோப்பு வெங்கடாச்சலம், நடராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், ஆர்.டி.ஓ., கவிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் விமல்ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் கோமகன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், தாசில்தார்கள் கார்த்திகேயன், மகேஸ்வரன், ஜெயக்குமார், சிவசுப்ரமணியன் ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X