| உயரழுத்த மின்கம்ப பீங்கான் சேதம்; இருளில் மூழ்கிய திருப்பூர் Dinamalar
உயரழுத்த மின்கம்ப பீங்கான் சேதம்; இருளில் மூழ்கிய திருப்பூர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
02:25

திருப்பூர்:உயர் அழுத்த மின் கம்பத்தின் பீங்கான் பகுதி வெடித்து சேதமடைந்ததால், மின்தடை ஏற்பட்டு, திருப்பூர் இருளில் மூழ்கியது.திருப்பூரில், கடந்த சில நாட்களாக, அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்லடம் - அருள்புரம் இடையிலான, 110 கே.வி., உயர் அழுத்த மின் கம்பங்களில் பீங்கான் பகுதி வெடித்து சேதமடைந்தது. இதனால், திருப்பூர் சுற்றுப்பகுதியில், திருநகர் துணை மின் நிலையம் நீங்கலாக, 10 துணை நிலைங்களுக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.இரவு முழுதும் மின்சாரம் இன்றி திருப்பூர் பகுதி இருளில் மூழ்கியது. இதையடுத்து, 45 நிமிடத்தில், மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதேசமயம், சந்தைப்பேட்டை, அருள்புரம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பல மணி நேரத்துக்கும் மேலாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மாறாக, சீரமைப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் மின் இணைப்பு அளிக்கப்பட்டன.ஒரு சில பகுதிகளில், இரவு முழுதும் மின்தடை நீடித்த நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு மின்சாரம் வந்தது. இரவு முழுதும் நீடித்த மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பலத்த காற்று வீசும் போது மின் கம்பங்களில் உள்ள பீங்கான் இன்சுலேட்டர்களில் உப்பு படிந்து விடுகிறது.இரவில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்போது அவை வெடித்துச் சிதறி மின் தடை ஏற்படுகிறது. மின் தடையை முழுமையாக சீரமைக்க, உயர் அழுத்த மின் கம்பங்களில் உள்ள பீங்கான்களை மாற்றி காம்போசைட் பாலிமர் இன்சுலேட்டரை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X