உடுமலை:உடுமலை கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.பதவியேற்பு விழா, தளி ரோடு, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பொள்ளாச்சி எம்.பி.,சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். திருநாவுக்கரசு சங்கத்தின் புதிய தலைவராகவும், தேவராஜ், செயலாளராகவும், கணேசன் துணைத்தலைவராகவும், ஸ்ரீநாத் பொருளாளராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, சங்கத்தின் மற்ற புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக்கொண்டனர். விழாவில், கோவை, திருப்பூர், மேட்டுபாளையம், பல்லடம், கட்டடப் பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள், ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், 'அன்பு இல்லம்' ஆதரவற்றோருக்கான காப்பகம் நடத்தும் வக்கீல் அன்புசெழியனுக்கு, பாலகிருஷ்ணன் நினைவு விருது வழங்கப்பட்டது. பொறியாளர் சபாபதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.