உடுமலை:உடுமலை, நகராட்சி 24வது வார்டில், பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதால், கழிவுநீர் வீடுகளில் புகுந்து, நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.உடுமலை, நகராட்சி, 24வார்டுக்குட்பட்டது நக்கீரன் வீதி. இங்கு, 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. உடுமலை நகரில், பாதாளச்சாக்கடை திட்டம், கடந்த 2013 ம்ஆண்டு செயல்படுத்தப்பட்டது.சாக்கடை கால்வாய்களில் தேங்குவது, உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாகவே இத்திட்டம் உடுமலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது, திட்டம் பல பகுதிகளில் பாதி நிலையில் நிற்பதால், மக்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.நக்கீரன் வீதியில், பெரும்பான்மையான வீடுகளுக்கு பாதாளச்சாக்கடை திட்டத்துக்கான இணைப்பு வழங்கப்படவில்லை. பாதி வீடுகளுக்கு வழங்கப்பட்டும், மீதமுள்ள வீடுகளில், கழிவுநீர் கால்வாய் வழியில் மட்டுமே வெளியேற்ற முடியும் என்ற நிலையும் உள்ளது.கால்வாயில் மட்டுமின்றி, வீடுகளுக்கும் கழிவுநீர் தேங்கியிருக்கும் அவலம் இப்பகுதியில் நடக்கிறது. பொதுமக்கள், வீடுகளை விட்டு கழிவுநீரை கடந்துதான் வர வேண்டியுள்ளது.மேலும், இணைப்புகள் அரைகுறையான நிலையில் இருப்பதால், வீதியில், மிகுதியான துர்நாற்றமும் தொடர்ந்து வீசுகிறது.நேத்ரா:
எங்க பிரச்னைக்கு மட்டும், இப்படி கண்டுக்காம, வீடுகள்ல கழிவுநீர் குளமா இருக்கிறதையும், நகராட்சி நிர்வாகம் வேடிக்கைதான் பாக்கறாங்க.