தேவனுார்புதுாரில் தற்காலிக போலீஸ் செக்போஸ்ட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
02:42

உடுமலை:தேவனுார்புதுாரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக போலீஸ் செக்போஸ்ட்டை புறக்காவல் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்டது தளி போலீஸ் ஸ்டேஷன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோவை மாவட்டம், கோமங்கலம் போலீசிலிருந்து திருப்பூர் மாவட்ட கிராமங்கள் பிரிக்கப்பட்டு, தளி போலீஸ் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டன. இதனால், தளி போலீஸ் கட்டுப்பாட்டில், 41 கிராமங்கள் என எல்லை விரிவடைந்தது. தளி போலீஸ் கட்டுப்பாட்டில், 24 தாய்க்கிராமங்களும், 17 குக்கிராமங்களும் உள்ளன. ஸ்டேஷன் திருமூர்த்திமலை அருகிலும், கட்டுப்பாட்டு கிராமங்கள் கோவை மாவட்ட எல்லையிலும் உள்ளன. இதனால், இரவு ரோந்து உட்பட பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, தேவனுார்புதுாரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சிற்றாறுகளில் இருந்து, மணல் கடத்தல் அதிகரித்தது. தேவனுார்புதுார், கோவை மாவட்ட எல்லை கிராமங்கள் வழியாக கேரளாவுக்கு செல்லும் வழித்தடத்தை மணல் கடத்தல் வாகனங்கள் பயன்படுத்த துவங்கின.கனிம வள கொள்ளையை கட்டுப்படுத்தவும், குற்றத்தடுப்பு பணிகளுக்காகவும், தேவனுார்புதுாரில், தற்காலிக போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. கோவை-திருப்பூர் மாவட்ட எல்லையிலுள்ள, பஸ் ஸ்டாப் நிழற்கூரையில், இந்த செக்போஸ்ட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் கோரிக்கை அடிப்படையில், அவ்விடத்தில், தற்காலிக செக்போஸ்ட்டுக்கு மாற்றாக, புறக்காவல் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X