நாகப்பட்டினம்: நாகை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வளவனூரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம், வளவனூரைச் சேர்ந்தவர் சுரேஷ்,39. கடந்த 15ம் தேதி, இவருக்கு சொந்தமான லாரியில் 2 யூனிட் ஆற்று மணலை ஏற்றிச் சென்ற போது, நாகை மாவட்டம் மணல்மேடு அருகே மாவட்ட சுரங்கத்துறை அதிகாரி பிரியா, லாரியை நிறுத்திசோதனையிட்டுள்ளார். லாரி டிரைவர் தணிகாசலம், மணல் ஏற்றி வந்ததற்கான ஆவணத்தை காட்டியுள்ளார். ஆனாலும், சுரங்கத்துறை அதிகாரிலாரியை பறிமுதல் செய்ததாக கூறியும், தனது லாரியை விடுவிக்க கோரியும் சுரேஷ், மனைவி கோமதி,38, 13,11, 10 வயது மகள்கள்மற்றும் லாரி டிரைவர் தணிகாசலம்,27 ஆகியோருடன் நேற்று மாலை, நாகை,கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நாகூர் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலக வரண்டாவில் லாரி உரிமையாளர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.