குடிநீர் குழாயில் உடைப்பு; வேண்டும் நிரந்தர தீர்வு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
22:41

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், கே.கே.நகர் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இக்குழாய் உடைப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு, பவானி ஆற்றிலிருந்து மூன்று குடிநீர் திட்டத்திலிருந்து, தினமும் மொத்தமாக, 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த தண்ணீரை சாமண்ணா வாட்டர் ஹவுசில் சுத்தம் செய்து, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.கே.கே.நகர், பஸ் ஸ்டாண்ட் பூஸ்டர், பழைய நகராட்சி அலுவலகம், மணி நகர், சங்கர் நகர் ஆகிய ஐந்து இடங்களில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு, ஒரே நேரத்தில் தண்ணீர் பம்ப்பிங் செய்யப்படுகிறது.ஒரு மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டால், மற்ற நான்கு மேல்நிலைத் தொட்டிகளுக்கு பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்படுவதால், குடிநீர் பம்பிங் செய்வது நிறுத்தப்படும். இதனால் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.ஐந்து மேல்நிலைத் தொட்டிகளுக்கு செல்லும் குழாயில், வால்வுகளை தனித்தனியாக அமைக்கும்படி பலமுறை முன்னாள் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நகராட்சி அதிகாரிகள் கடந்த, 20 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கே.கே.நகர் மேல்நிலைத் தொட்டி மேடான பகுதியில் அமைந்துள்ளது. அதனால் இத்தொட்டிக்கு செல்லும் குழாயில், தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருப்பதால், காரமடை சாலையில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.இதை ஒவ்வொரு மாதமும் மின்தடை நாளில் சரி செய்கின்றனர். அதுவரை குடிநீர் வீணாக வெளியேறுவதோடு, சாலையும் சேதமடைந்து, ஆங்காங்கே குழிகள் ஏற்படுகின்றன.நேற்று முன்தினம், மேட்டுப்பாளையம் நகரில் மின்தடை ஏற்பட்டதை அடுத்து, கே.கே.நகர் மேல்நிலைத் தொட்டிக்கு வரும் குடிநீர் குழாயில், மூன்று இடங்களில் ஏற்பட்டிருந்த உடைப்பை சரி செய்யும், பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.புதிதாக நகராட்சி கமிஷனராக பதவியேற்கும் சுரேஷ்குமார், நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்து, அங்கு தரை மட்டத் தொட்டி கட்ட, நடவடிக்கை எடுக்கும்படி, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்ன செய்ய வேண்டும்!'கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், காரமடை சாலையில், பாரதி நகரில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட நகராட்சி இடத்தில், தரை மட்டத் தொட்டி கட்டி, அதில் கே.கே.நகர் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் தண்ணீரை தேக்கி, அங்கிருந்து பம்ப்பிங் செய்தால், குழாயில் உடைப்பு ஏற்படாது' என, 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் நகராட்சி அதிகாரிகள், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X