| வீணாகும் ஆழ்துளை கிணறு :தொடரும் தண்ணீர் தட்டுப்பாடு Dinamalar
வீணாகும் ஆழ்துளை கிணறு :தொடரும் தண்ணீர் தட்டுப்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
22:42

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, 7வது வார்டு அண்ணா நகரில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ஊராட்சி ஒன்றிய நிதியில், 5 லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.கிணறு அமைத்து, நீண்ட நாட்களாகியும், இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், இப்பகுதி மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு, இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளது. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஆழ்துளை கிணறு நீர், 15 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இங்கிருந்து, அண்ணா நகரில் உள்ள, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். ஆனால், இங்கிருந்து மேல்நிலைத் தொட்டிக்கு குழாய் பதிக்கும் பணி இன்னும் துவங்கவில்லை. இதனால், 5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மக்களுக்குப் பயன் இல்லாமல் கிடக்கிறது' என்றனர்.நாயக்கன்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'ஆழ்குழாய் கிணறுக்கு மின் இணைப்பு கொடுக்க நான்கு மின்கம்பங்கள் மற்றும் ஒரு டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X