திருவள்ளூரில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு பணி... துவங்கியது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:17

திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சியில், வருவாய் அதிகரிக்கும் வகையில், குடிநீர் இணைப்பு இல்லாத, 6,432 வீடுகளுக்கு, வீட்டு இணைப்பு வழங்கும் பணி துவங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான முன் வைப்பு தொகையினை, தவணை முறையில் செலுத்தலாம் எனவும், நகராட்சி அறிவித்து உள்ளது.



திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட, 27 வார்டு களில், 211 தெருக்கள் உள்ளன. இங்கு, நகராட்சி, சொத்து வரி விதிக்கப்பட்ட, 12 ஆயிரத்து, 536 வீடுகள், கடைகள் உள்ளன. நகராட்சி பகுதியில், 55 ஆயிரத்து, 830 பேர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு, நகராட்சி மூலம், தினமும், 50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, வெள்ளியூரில், ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்கப்பட்டு, 35 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.



பட்டரை




பெரும்புதுார், புங்கத்துார் உட்பட, 13 இடங்களில் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, தினமும், 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.இவற்றை, நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட, 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து, தெரு குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.பொதுவாக, வீட்டு குடிநீர் இணைப்பு, 70 சதவீதம், பொது இணைப்பு, 30 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், திருவள்ளூரில், வீட்டு இணைப்பை விட, பொது இணைப்பு அதிகம். இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.



பணி துவக்கம்





இதையடுத்து, திருவள்ளூர் நகராட்சியில், வீட்டு குடிநீர் இணைப்பினை அதிகரிக்க, தமிழக அரசு, 2.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.இந்த நிதியில், சொத்து வரி விதிக்கப்பட்ட, குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளில், நகராட்சி நிர்வாகம் தாமாகவே முன்வந்து, இணைப்பு வழங்கும். இதற்கான முன் வைப்பு தொகையினை, வீட்டு உரிமையாளர்கள், நான்கு தவணை மூலம், நகராட்சிக்கு செலுத்தலாம். இப்பணி முடிந்ததும், பொது குழாய்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு, வீட்டு குடிநீர் இணைப்பு அதிகரிக்கப்படும். இதன் மூலம், நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.



நகராட்சியில், குடிநீர் இணைப்பு இல்லாத, 6,432 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில மாதத்தில், அனைத்து வீட்டிற்கும் இணைப்பு வழங்கப்பட்டு விடும். அவர்கள், டிபாசிட் தொகையினை, நான்கு தவணையில் செலுத்தலாம்.



-பி.சந்தானம்,நகராட்சி ஆணையர்,திருவள்ளூர்

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X