குப்பை தொட்டியாக மாறும் கிராமங்கள்: கேள்விக்குறியாகும் சுகாதாரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:24

மடத்துக்குளம்:மடத்துக்குளத்தின் பல இடங்களில், கழிவுகள் கொட்டுவதால், சுகாதாரக்கேடும், அருவருப்பான சூழலும் ஏற்படுவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மடத்துக்குளம் தாலுகாவில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களும், மடத்துக்குளம், கணியூர், கொமரலிங்கம் ஆகிய சிறு நகரங்களும் உள்ளன.


தனித்தாலுகாவான இங்கு குப்பைகள் அழித்தல், கழிவுப்பொருட்களை முறையாக அப்புறப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு இல்லை. இதனால், பல கிராமப்பகுதியின் ஒதுக்குப்புறமான இடங்கள், தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்கள் குப்பைத்தொட்டிகளாக மாறிவருகின்றன.பல இடங்களில் நடக்கும் விசேஷங்கள், நிகழ்ச்சியில் உணவுகள் சாப்பிட்ட பிறகு ஒருமுறை பயன்படுத்தப்படும் தட்டுகள், டம்ளர்கள், விரிப்புகள், மீதமாகும் உணவுகள், இலைகள், சமையல் கழிவுகள் பல இடங்களில் கொட்டப்படுகின்றன.இந்த செயல்களால் சுகாதாரக்கேடும், அருவருப்பான சூழலும் உருவாகிறது. மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் இதை சாப்பிடுவதால் பலவித சிரமத்துக்கு ஆளாகின்றன.


காற்றின் வேகத்தால் இவை ரோட்டில் பரவிக்கிடக்கின்றன. கணியூர் ரோட்டிலுள்ள வேடபட்டி பிரிவு நிழற்கூரை பகுதியில் உணவு தட்டுக்கள் குவிந்து கிடக்கின்றன. உடுமலை - மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் பல இடத்தில் குவியல் குவியல்களாக கழிவுகள் பரவிக்கிடக்கின்றன. மைவாடி பிரிவு அருகே தக்காளி பழங்கள் ரோடு ஓரம் கொட்டப்பட்டு அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதே நிலை நீடித்தால் கிராமப்பகுதியிலுள்ள ஒதுக்குப்புறங்கள், விளைநிலம் உள்ள பகுதிகள் அனைத்தும் குப்பைத்தொட்டிகளாக மாறி விடும்.இது போன்ற செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள்வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X