செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:27

நாளை மின் குறைதீர் கூட்டம்



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர், திருத்தணி ஆகிய கோட்டங்கள் செயல்படுகின்றன. இதில், காஞ்சிபுரம் வடக்கு மின் கோட்டத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கும் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு நடக்கும்.இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்களின் குறை, நிறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் பதிவு செய்யலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் வளர்மதி தெரிவித்தார்.




அம்மனுக்கு பாலாபிஷேகம்



திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை ராகுகால பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் உட்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.இதேபோல், திருத்தணியில், தணிகாசலம்மன், பரமேஸ்வரி அம்மன், கங்கையம்மன், படவேட்டம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.



பைரவர் யாகம்



திருத்தணி: திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள மனோன்மணி சமேத சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில், சொர்ணாகர்ஷன பைரவர் ஜெயந்தி விழா மற்றும் அஷ்ட பைரவர் மஹா யாகம் நேற்று நடந்தது.இதற்காக, கோவில் வளாகத்தில், காலை, 9:00 மணிக்கு ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் மஹா யாகம் நடந்தது.அதைத் தொடர்ந்து பைரவர் சன்னிதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக காலை, 8:00 மணிக்கு, சதாசிவ லிங்கேஸ்வரர் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இதில், திரளான பெண் பக்தர்கள், நெய் விளக்கு ஏற்றியும், பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.




220 குடிசைக்கு தார்பாய்



திருத்தணி: திருத்தணி நகராட்சி, மத்துார், தாழவேடு, பூனிமாங்காடு, தரணிவராகபுரம் உட்பட, 10 கிராமங்களில், குடிசை வீடுகளில் வசிக்கும் இருளர்கள், அருந்ததியினர் என, மொத்தம், 220 குடும்பத்தினருக்கு, நோபல் பவுண்டேஷன் சார்பில், மழைக்கு இலவசமாக தார்பாய் நேற்று வழங்கப்பட்டது.இதுதவிர, திருத்தணி தாலுகாவில், சந்தான கோபாலபுரம், தரணிவராகபுரம், தும்பிகுளம் மற்றும் மாமண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை துார் வாரி நோபல் பவுண்டேஷன் சீரமைத்துள்ளது.மேலும் நகராட்சியில், ஐந்து குளங்களை ஆழப்படுத்தி சீரமைத்தது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கி வருகிறது.




மாவட்ட கால்பந்து போட்டி



உத்திரமேரூர்: பள்ளிகளுக்கு இடையே, மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லுாரில் நடந்தது.'மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன்' சார்பில் நடந்த இப்போட்டியில், உத்திரமேரூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட, பல்வேறு ஊர்களை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், உத்திரமேரூர் லயோலா பள்ளி மாணவர்கள், வெற்றி பெற்றனர்.




24ல் வன போஜன உற்சவம்



திருவள்ளூர்: வீரராகவர் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, கோசாலையில், வரும், 24ம் தேதி, வன போஜன உற்சவத்தை முன்னிட்டு, உற்சவர் வீரராகவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.திருவள்ளூர், வீரராகவர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலை, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வன போஜன உற்சவத்தின்போது, உற்சவர் கோசாலைக்கு எழுந்தருளுவது வழக்கம். வன போஜன உற்சவத்தை முன்னிட்டு, வரும் 24ம் தேதி, காலை, 6:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவ பெருமாள் கோவிலிலிருந்து புறப்பட்டு, கோசாலையில் உள்ள தானப்ப நாயக்கன் மண்டபம் வந்தடைகிறார்.அன்று, காலை, 11:00 மணிக்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின், மாலை கோவிலுக்கு, பெருமாள் திரும்புகிறார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X