கும்மிடிப்பூண்டி மற்றும், கவரைபேட்டை ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடப்பதால், கும்மிடிப்பூண்டி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
l கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு, அதிகாலை, 4:55 மணி, 5:20 மணிக்கு இயக்கப்படும், புறநகர் மின்சார ரயில்கள், நாளை, ரத்து செய்யப்பட்டுள்ளன
l சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு, இன்று இரவு, 11:20 மணிக்கு இயக்கப்படும் ரயில், மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்
l சென்னை, சென்ட்ரல் மூர் மார்க்கெட் நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு, அதிகாலை, 12:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், நாளை, எண்ணுார் வரையும், 23ம் தேதி, மீஞ்சூர் வரையும், இயக்கப்படும்
l கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, அதிகாலை, 2:45 மணிக்கு இயக்கப்படும் ரயில், நாளையும், 23ம் தேதியும், கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன
l கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், நாளை கும்மிடிப்பூண்டி - எண்ணுார் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -