| குடியிருப்பு பகுதியில் 'மழைநீர் குளம்': டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் Dinamalar
குடியிருப்பு பகுதியில் 'மழைநீர் குளம்': டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:32

கோட்டூர்:கோட்டூர் மலையாண்டிபட்டணம் உல்லாஸ் நகரில், பல வாரங்களாக மழைநீர் தேங்கி நிற்பதால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.கோட்டூர் சுற்றுப்பகுதிகளில் கடந்த, இரண்டு வாரங்களாக அவ்வப்போது மழை பெய்கிறது.


கடந்த வாரம் பெய்த கனமழையால், முறையாக துார்வாரப்படாமல் இருந்த சாக்கடைகளில் குப்பை அடைத்து மழைநீர் ரோட்டில் வழிந்தோடியது.கோட்டூர் மலையாண்டிபட்டணம் பகுதியில் பல இடங்களில் மழைநீர் குடியிருப்புகளில் புகுந்தது.


இதில், உல்லாஸ் நகர் 'டீலக்ஸ்' பகுதியில், மழைநீர் தேங்கியதுடன், வீடுகளிலும் புகுந்தது. ஒரு வாரமாக மழைநீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரம் பாதிக்கிறது.மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி, மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.


மழைநீரை வெளியேற்றவும், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்வதற்கும், மக்கள் பேரூராட்சியில் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.மக்கள் கூறுகையில், 'மழைநீரை வடிக்க வலியுறுத்தி, பேரூராட்சியில் புகார் கொடுத்து உள்ளோம்.


சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் எனக்கூறினால், சாக்கடை கால்வாய் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என பேரூராட்சியினர் தெரிவிக்கின்றனர்.பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து, சாக்கடையை சுத்தம் செய்து, மழைநீரை வடிக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X