| உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு 100 கிலோ புகையிலை பறிமுதல் Dinamalar
உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு 100 கிலோ புகையிலை பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:33

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் கடந்த ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோவை மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, கடந்த, 14ம் தேதி முதல் ஆய்வு மேற்கொண்டனர்.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து, மளிகை, பெட்டி கடைகள், பீடா ஸ்டால், டீ கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் கடந்த, 14ம் தேதி முதல், 18ம் தேதி வரை மொத்தம், 148 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 32 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட, 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 32 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆறு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X