இலவச பட்டா வழங்க அளவீடு: வருவாய் துறையினர் களப்பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:34

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில், நத்தம் காலியிடத்தில் வீடு கட்டியுள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வருவாய்த்துறையினர் அளவீடு பணியை துவங்கியுள்ளனர்.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்துார், ஆண்டிபாளையம், கொண்டம்பட்டி, வடபுதுார், கிணத்துக்கடவு, சொக்கனுார், சூலக்கல், கோவிந்தாபுரம், நெ.10 முத்துார் உட்பட பல கிராமங்களில் உள்ள நத்தம் காலியிடத்தில், பொதுமக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.அவர்களுக்கு, நத்தம் பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது, நத்தம் காலியிடத்தில் வீடு, குடிசை அமைத்து குடியிருந்து வருபவர்களுக்கு நத்தம் பட்டா வழங்க வருவாய்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி, நத்தம் காலியிடத்தில், குடிசை அல்லது வீடு கட்டி குடியிருந்து வருபவர்கள், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களை அணுகி இலவச நத்தம் பட்டா பெற விபரத்தை கடந்த மாதத்தில் இருந்தே தெரிவித்து வந்தனர்.ஊராட்சிகளில் உள்ளவர்களுக்கு மூன்று செண்டும், பேரூராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு, 2.5 சென்ட் நத்தம் பட்டா வழங்கப்படவுள்ளது.இதற்காக, கடந்த மாதம் முதல், கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்களை சந்தித்து, கணக்கெடுப்பு எடுத்தனர்.இதனை தொடர்ந்து, நத்தம் பட்டா வழங்குவதற்காக, சர்வேயர் மூலம் அளவீடு செய்யும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், நத்தம் பட்டா வழங்கப்படவுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X