| மழைநீர் குட்டையான மயானம் Dinamalar
மழைநீர் குட்டையான மயானம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:36

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே மழைநீர் குட்டையாக, மயானம் மாறியுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது மோதிராபுரம். கிராமத்தின் வடக்குகிழக்கில் ஊர் பொது மயானம் அமைந்துள்ளது. மயானம் அமைந்துள்ள நிலம் தாழ்வான பகுதியாக உள்ளது.


இரண்டு பக்க ரோடுகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீருக்கு முறையான வடிகால் வசதி செய்யாமல் உள்ளதால், மயானத்தில் தேங்கி, குளம் போல காட்சியளிக்கிறது.சடலத்தை அடக்கம் செய்ய, சேற்றுக்குள் குழி தோண்டுவது இயலாத காரியமாக உள்ளது. அதையும் தாண்டி, போராடி குழி தோண்டி புதைத்தாலும், புதைத்த இடத்தில் மண் நீரால் அரிக்கப்பட்டு, சடலம் வெளியே வரும் அவல நிலை நிலவுகிறது.


இரண்டு வாரங்களுக்கு முன்பு, அங்கு புதைத்த சடலம் வெளியில் வந்து, ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் அடக்கம் செய்வதற்குள் படாதபாடு பட்டுள்ளனர்.மயானத்தில் தண்ணீர் தேங்காத வகையில் மழைநீர் மற்றும் கழிவுநீருக்கு முறையான வடிகால் வசதி செய்ய பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X