பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியை கண்டித்து, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி நகர தி.மு.க., மற்றும் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது. நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். நகர துணைச் செயலாளர்கள் கார்த்திக்கேயன், விஜயா முன்னிலை வகித்தனர்.கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட குளறுபடிகளை சரி செய்து பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும். குடிநீர் வினியோகம் சீராக இருக்க வேண்டும். சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.