| வாலிபரை வெட்டிய இரண்டு பேர் கைது Dinamalar
வாலிபரை வெட்டிய இரண்டு பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:40

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், வாலிபரை வெட்டிய, ரவுடி உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.


செங்கல்பட்டு அடுத்த, பெரியநத்தம் ரமேஷ் என்பவரிடம், மே மாதம், ரவுடி கும்பல், மாமுல் கேட்டனர். தரமறுத்ததால், அவரை சரமாரியாக வெட்டி விட்டு, அந்த கும்பல் தப்பிச் சென்றது.இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.இதற்கிடையில், புலிப்பாக்கம் பகுதியில் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, போலீசாரை கண்டதும், இருவர் தப்பியோடினர். அவர்களை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து, போலீசார் விசாரித்தனர்.இந்த விசாரணையில், செங்கல்பட்டு நாவலார் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த ரவுடி அசோக், 24, வல்லம் சாந்தி நகர் ஹரித்பிலேமின், 24, என்பது தெரியவந்தது. இவர்கள் தான், பெரியநத்தம் ரமேஷை வெட்டியதும் தெரிந்தது. அவர்களிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சா மற்றும் 10 பட்டா கத்திகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அவர்களை அடைத்தனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X