| லஞ்ச ஒழிப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு Dinamalar
லஞ்ச ஒழிப்பு குறித்து பள்ளியில் விழிப்புணர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:47

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதுார் ஹயக்ரீவ வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில், லஞ்ச விழிப்புணர்வு வார விழா நடந்தது. இதில், 'நேர்மை' என்ற தலைப்பில், மாணவ - மாணவியர், ஆசிரியர், ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர்சரவணன், லஞ்ச ஒழிப்பு குறித்து விளக்க உரையாற்றினார். தவிர, 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்காக, 'நேர்மை - ஒரு வாழ்க்கை முறை' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவில், பள்ளி தாளாளர் கஸ்துாரி ரங்கநாதன், பொருளாளர் ஸ்ரீதர், பள்ளி முதல்வர் ஸ்ரீராமன், துணை முதல்வர் விஜயலட்சுமிமற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X