இழுத்தடிப்பு! கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினருக்கு ஊதியம்... நூறு நாள் திட்ட பதிவேடு பராமரிப்பு பணி சுணக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2019
23:58

கம்மாபுரம் : மாவட்டத்திலுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினருக்கு வழங்குவதாக அறிவித்த ரூ. 3 ஆயிரம் ஊதியத்தை வழங்காமல், மாவட்ட நிர்வாகம் இழுத்தடிப்பதால், அவர்கள் கவலையடைந்துள்ளனர்.



தமிழகத்தில், 31 மாவட்டங்களில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, ஐந்து முதல், ஏழு ஆண்டுகளுக்கு, நீடித்த தன்மையுடைய, வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவது, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இயக்கத்தின் நோக்கமாகும். மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.




முதல் கட்ட மாநிலத்திலுள்ள, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில், 2,323 ஊராட்சிகளில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க, 2012 -13ல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை, முன்னாள் முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார்.இச்சங்கங்கள் மூலம், ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க, சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக, ஊராட்சிக்கு, தலா 10 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது.



மாவட்டத்திலுள்ள கடலுார், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், கம்மாபுரம், விருத்தாசலம், நல்லுார், மங்களூர் உட்பட 13 ஒன்றியத்திலுள்ள 683 ஊராட்சிகளில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தில், ஒன்று முதல் இரண்டு ஊழியர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள், அனைவருக்கும் வீடுகள் திட்ட பயனாளிகள் பட்டியல் தயாரித்தல், துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறை கட்டுதல், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அரசு நலத்திட்டங்களை பெற்று தருதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடுகின்றனர்.




அவர்களுக்கு மாத ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, கூடுதலாக நுாறு நாள் திட்டப் பணி பதிவேடுகளை பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும், ரூ. 3 ஆயிரம் ஊதியம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பணி வழங்கப்படவில்லை.நுாறு நாள் திட்ட பதிவேடுகளை பராமரிப்பு செய்து வந்த ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் ஊதியமும் நிறுத்தப்பட்டது.




அவர்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஊதியமின்றி பதிவேடுகள் பராமரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் கூறுகையில், 'எங்களுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்குவது, போதுமானதாக இல்லை. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, எங்களுக்கு கூடுதலாக நுாறுநாள் திட்டப் பதிவேடுகளை பராமரிப்பு செய்ய பயிற்சியளிக்கப்பட்டு, கணக்காளர்களாக நியமித்து, 3000 ரூபாய் ஊதியம் வழங்குவதாக அறிவித்தனர்.



ஆனால், இது நாள் வரை நியமிக்கப்படவில்லை' என்றனர். இது குறித்து ஊராட்சி செயலர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'நுாறு நாள் திட்டப் பதிவேடுகளை பராமரிப்பு செய்யும் ஊராட்சி செயலர்களுக்கு, மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இல்லையென்றால், கணக்காளர்களை உடனடியாக பணியமர்த்தி எங்களை அப்பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X