கடலுார் : கடலுார் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடலுார் நகராட்சி அலுவலகத்தில், கருப்பு கொடியுடன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கடலுார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பேச்சு வார்த்தையில் உறுதியளித்தப்படி சிறு பழ வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். வி.சி., மண்டல செயலாளர் திருமாறன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் சுப்புராயன், மாநில தலைவர் கஜேந்திரன், தமிழர் கழக பரிதிவாணன், சமூகநீதி பாசறை சாய்ராம், தருமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.