களிமண் சிற்ப கலைஞருக்கு மத்திய அரசின் நற்சான்றிதழ் | கடலூர் செய்திகள் | Dinamalar
களிமண் சிற்ப கலைஞருக்கு மத்திய அரசின் நற்சான்றிதழ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
00:30

புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த சுடு களிமண் சிற்ப கலைஞர் வெங்கடேசனுக்கு, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.




சிறந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற, கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் சார்பில், சில்பகுரு விருது 10 பேருக்கும், தேசிய விருது 25 பேருக்கும், நற்சான்றிதழ் 40 பேருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி, கடந்த 2017ம் ஆண்டுக்கான தேசிய நற்சான்றிதழ் விருதுக்கு, வில்லியனுாரை சேர்ந்த சுடு களிமண் சிற்ப கலைஞர் வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நற்சான்றிதழுடன், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.



ஏற்கனவே, வில்லியனுார் கணுவாப்பேட்டையை சேர்ந்த சுடு களிமண் சிற்ப கலைஞர் முனுசாமி, சில்பகுரு விருதுக்கு தேர்வாகி உள்ளார். புதுச்சேரியை சேர்ந்த இரண்டு கலைஞர்களுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X