புதுச்சேரி : தலைமைச் செயலகத்தில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளான நவம்பர் 19ம் தேதியன்று, தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அன்றைய தினம், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.இதன்படி, தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தலைமைச் செயலர் அஸ்வனிக்குமார் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர் கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.