திருப்பூர்:முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழா மாநகர மாவட்ட காங்., சார்பில் கொண்டாடப்பட்டது.மாவட்ட அலுவலகம் ராஜிவ் பவனில் இந்திரா உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.பழனிசாமி, ஈஸ்வரன், கோபால்சாமி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கோபால், சித்திக், பொது செயலாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.l ஐ.என்.டி.யு.சி., சார்பில் இந்திரா நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது. தொழிற்சங்க கொடியை பெருமாள் ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சீனிவாசன் பங்கேற்றனர்.l இந்திரா காங்., பொது தொழிலாளர் சங்கம் சார்பில், நடந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார்.மாநில பொது செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் காளிமுத்து, பங்கேற்றனர்.l பனப்பாளையத்தில் நடந்த விழாவுக்கு, நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் மணிராஜ் முன்னிலை வகித்தார். மகளிர் அணி தலைவி சுந்தரி, மாவட்ட செயலாளர் நரேஷ்குமார், நகர பொது செயலாளர் கிருஷ்ணகுமார், பங்கேற்றனர்.