நெட்டப்பாக்கம் : ஏம்பலம் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் முதல் சோமவாரம் சிறப்பு பூஜை நடந்தது.ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
அதனையொட்டி அன்று காலை விநாயகருக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு புதுச்சேரி ஸ்ரீலஸ்ரீ கனகசபை சுவாமிகள் தலைமையில் சோமவாரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏம்பலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.