போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
00:55

200 கிலோ மாவா பறிமுதல்



அமைந்தகரை: அமைந்தகரை போலீசார், நேற்று காலை, பார்த்தசாரதி தெருவில் உள்ள குடோனில், சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்ட, 200 கிலோ மாவா சிக்கியது. இதுதொடர்பாக, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ், 34, நிரஷ்குமார், 19, பாண்டியன், 31, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.




வாலிபருக்கு அரிவாள் வெட்டு



வடக்கு கடற்கரை: பாரிமுனை, கிளைவ் பேட்டரி பகுதியைச் சேர்ந்தவர், வடிவேந்தன், 35; கூலித்தொழிலாளி. இவர், நேற்று அதிகாலையில், தன் வீட்டு வாசலில் துாங்கினார். அப்போது, அங்கு சென்ற மர்ம நபர்கள், வடிவேந்தனை, அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினர். பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வடக்கு கடற்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.




ஆட்டோவில் கஞ்சா, 'சப்ளை'



வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையில் கஞ்சா விற்பனை ஜோராக நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று அப்பகுதியில், வண்ணாரப்பேட்டை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜ், 28, புளியந்தோப்பைச் சேர்ந்த சுதாகர், 27, மணலியைச் சேர்ந்த உதயா, 25, ஆகியோர், ஆட்டோவில் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், ஆட்டோ மற்றும் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.




போலி சமூக ஆர்வலரிடம் விசாரணை



ராயப்பேட்டை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களின் கவனத்தை திசை திருப்பி, மர்ம நபர்கள், நகை, பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று, நோயாளிகளுக்கு, உதவி செய்வது போல் நடித்து, பணம் பறிக்க முயன்ற, போலி சமூக ஆர்வலர், குமார், 58, என்பவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.




சூதாடிய எட்டு பேர் சிக்கினர்



அசோக் நகர்: அசோக் நகர், காவல் நிலைய எல்லையில், சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு மாம்பலம், காமாட்சிபுரம், இரண்டாவது தெருவில் உள்ள, ஒரு ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரவிவர்மா, 37, நெற்குன்றத்தைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன், 46, வடபழனியைச் சேர்ந்த குமார், 48, உள்ளிட்ட, எட்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.




தகராறில் ஈடுபட்ட இருவருக்கு, 'காப்பு!'



மணலி: திருவொற்றியூர், காலடிப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார், 28; தனியார் நிறுவன ஊழியர். இவர், மனைவி சோனியா, 25, என்பவருடன், நேற்று, மணலி, சின்ன சேக்காடு வழியாக, டூ - வீலரில் சென்றார். அப்போது, சதீஷ்குமாரை பின் தொடர்ந்து, மற்றொரு டூ - வீலரில் சென்ற இருவர், தொடர்ந்து ஹாரன் ஒலியை எழுப்பி உள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. மணலி போலீசார் விசாரித்து, சின்ன சேக்காடு சேர்ந்த கார்த்திக், 22, ஹரிஷ்குமார், 19, ஆகியோரையும் கைது செய்தனர்.




மடிக்கணினி திருடர்கள் மீது, 'குண்டாஸ்'



ஆவடி: திருமுல்லைவாயல், எஸ்.எம்.நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறு மடிக்கணினிகள் திருட்டு போன வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அருள்பாண்டியன், 23, லோகேஷ், 23, சிரஞ்சீவி, 24, ஆகியோர் சிக்கினர். இவர்களை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்




காவல் நிலையத்தில் டூ - வீலர், 'ஆட்டை'



வில்லிவாக்கம்: அண்ணாநகரைச் சேர்ந்தவர், பிரசாந்த், 24. இவருக்கு, அக்., 30ம் தேதி, வில்லிவாக்கம், 200 அடி சாலையில், டூ - வீலரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வில்லிவாக்கம் போலீசார், பிரசாந்தின் வாகனத்தை வழக்கு விசாரணைக்காக, காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்விற்காக வாகனத்தை பார்த்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரிந்தது. காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் திருடப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X