ஜீவனாம்சம் வழங்காத கணவருக்கு 11 மாதம் சிறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
00:55

புதுச்சேரி ; விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம்வழங்க மறுத்த கணவருக்கு 11 மாதம் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.




புதுச்சேரியை சேர்ந்தவர் வரலட்சுமி, 22; இவரை, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரை சேர்ந்த செல்வம்,45; என்பவர், அரசு பள்ளி ஆசிரியர் எனக் கூறி சில ஆண்டிற்கு முன் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகே, செல்வம் அரசு பள்ளி ஆசிரியர் எனக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்தனர்.




அதனைத் தொடர்ந்து விவாகரத்து பெற்ற வரலட்சுமி, ஜீவனாம்சம் கோரி புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, வரலட்சுமிக்கு மாதம் ரூ. 5,000 ஜீவனாம்சமாக செல்வம் வழங்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டில், கீழமை கோர்ட் தீர்ப்பை உறுதி செய்ததோடு, வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது.



அதன்பிறகும் செல்வம், ஜீவனாம்சம் வழங்காததால் வரலட்சுமி, கோர்ட் உத்தரவை அமல்படுத்த கோரி புதுச்சேரி 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு செல்வம் ஆஜராகவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 27 மாத ஜீவனாம்சம் தொகை வழங்காததால், செல்வத்திற்கு 11 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.இந்த வழக்கில், வரலட்சுமிக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஆஜரானார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X