நலவாரிய உறுப்பினர் சேர்க்கை: 26ல் ஊட்டியில் சிறப்பு முகாம் | நீலகிரி செய்திகள் | Dinamalar
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை: 26ல் ஊட்டியில் சிறப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
00:59

ஊட்டி:ஊட்டியில் நல வாரியங்களில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு பதிவு முகாம், 26ல் நடக்கிறது.தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர், அமைப்பு சாரா ஓட்டுனர்கள், சலவை தொழிலாளர், கைவினை தொழிலாளர், வீட்டு பணியாளர்கள், வணிகர்கள் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு,17 நல வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டு, தொழிலாளர் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. வாரியங்களில் தொழிலாளர் பதிவு சேர்க்கை, தொழிலாளர் அலுவலர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் நல வாரியங்களில் புதியதாக உறுப்பினர்களை சேர்க்கும் சிறப்பு பதிவு முகாம், 26ம் தேதி காலை, 10:00 மணிக்கு, நீர் காய்ச்சிமந்து பகுதியில் நடக்கிறது.நலவாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள், பதிவு கோரும் விண்ணப்பத்தினை உரிய படிவத்தில், முகாமுக்கு வந்து நேரில் அளித்து, வாரியத்தில் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெறலாம்.பதிவு கட்டணம் ஏதுமில்லை. 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றொப்பமிட்ட ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வயது குறித்த சான்று மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன், தொழில் குறித்த சான்றினை உரிய அலுவலரிடம் விண்ணப்பத்தில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.அரசின் பிற துறையின் கீழ் உள்ள வாரியங்கள், திட்டங்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு பெற்றவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்ய இயலாது.இவ்வாறு, லெனின் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X