| வடலுாரில் ரவுடி வெட்டிக்கொலை Dinamalar
வடலுாரில் ரவுடி வெட்டிக்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:01

கடலுார் : வடலுாரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை போலீசார் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.




புதுச்சேரி, லாஸ்பேட்டை அடுத்த மடுவுப்பேட்டை சேர்ந்த ரவுடி முரளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த பாண்டியன் மகன் அமரன் என்கின்ற அமர்நாத் உள்ளிட்டோரை, புதுச்சேரி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.விடுதலையான அமர்நாத்தை, தந்தை பாண்டியன், மைத்துனர் உதயக்குமார் உள்ளிட்டோர், நேற்று முன்தினம், புதுச்சேரியிலிருந்து காரில் தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.



வடலுார் அடுத்த கருங்குழி அருகே காரை நிறுத்தி, டாஸ்மாக் கடையில் மது வாங்கச் சென்றனர். காரில் தனியாக இருந்த அமர்நாத்தை, புதுச்சேரியில் இருந்து பின் தொடர்ந்து சென்ற, 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி, கொலை செய்தது.இது குறித்து, அமர்நாத்தின் மைத்துனர் உதயக்குமார் கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி மடுவுபேட்டை பார்த்திபன், புதுப்பேட்டை சதீஷ், குமரகுருபள்ளம் சரவணன் உள்ளிட்ட 7 பேர் மீது, வடலுார் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.



குற்றவாளிகளை பிடிக்க, நெய்வேலி டி.எஸ்.பி., லோகநாதன் தலைமையில், டெல்டா சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில், குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X