குன்னுார்:'கடந்த, 2015ம் ஆண்டு முதல், சிறு விவசாயிகளுக்கு, நிலுவை தொகை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கடந்த, 2015ம் ஆண்டு முதல், மாதந்தோறும் பசுந்தேயிலைக்கான, குறைந்தபட்ச நிர்ணய விலையை தேயிலை வாரியம் அறிவித்து வருகிறது.இதனை, நீலகிரியில் உள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகள் தங்களது சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.பசுந்தேயிலைக்கான, இந்த குறைந்தபட்ச விலையை, வழங்க தவறிய தேயிலை தொழிற்சாலைகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.அதில், நிலுவை தொகையை கடந்த, 2015ம் ஆண்டு முதல் வழங்காத தொழிற்சாலைகளுக்கு தனித்தனியாக நிலுவை தொகைவழங்க எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக, கூடலுார்,பந்தலுார் பகுதிகளில் தேயிலை தொழிற்சாலைகள் தங்களது சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில், 50 சதவீதத்தை, 12 வாரத்திற்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலுவை தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்ததவறும் தொழிற்சாலை மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த தொகையைபெறுவதற்கு சிறு விவசாயிகளுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால்உடனடியாக தென்னிந்திய தேயிலை வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு பாலாஜி கூறியுள்ளார்.