டவுன்ஹாலில் வீணாகும் குடிநீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:19

டவுன்ஹாலில் வீணாகும் குடிநீர்டவுன்ஹால், ராஜவீதி மற்றும் தெலுங்கு வீதி சந்திப்பில், கடந்த, 10 நாட்களாக குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது.- முரளி, டவுன்ஹால்.

கணபதியில் பழுதடைந்த விளக்குகணபதி, மணியகாரம்பாளையம் ரோடு, திருவேங்கடம் நகர் இரண்டாவது வீதியில், பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.- ரவீந்திரன், கணபதி.

வெள்ளலுாரில் சேதமடைந்த மின்கம்பம்வெள்ளலுார், ஏழாவது வார்டு, தனியார் பள்ளி அருகில் மின்கம்பம் துருப்பிடித்து காணப்படுகிறது.- பெருமாள், வெள்ளலுார்.

ராமநாதபுரத்தில் குழாய் உடைப்புராமநாதபுரம், திருச்சி ரோடு, அருள்ஜோதி ஓட்டல் அருகில், மாநகராட்சி வளாகம் முன் உடைந்த குடிநீர் குழாய் இன்னும் சரி செய்யப்படவில்லை.- லோகநாதன், ராமநாதபுரம்.

வெங்கடசாமி நகரில் துர்நாற்றம்கணபதி, அத்திப்பாளையம் ரோடு, வெங்கடசாமி நகர், ஏ.எஸ்.கே., கார்டனில், சாக்கடை நீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.- ராமசுப்பிரமணியம், வெங்கடசாமி நகர்.

சாலையில் காய்ந்த மரக்கிளைராமநாதபுரம், திருச்சி ரோடு, கரூர் வைஸ்யா வங்கி எதிரே, சாலையில் விழுந்துள்ள மரத்தின் காய்ந்த கிளைகள் பல வாரங்களாக அகற்றப்படவில்லை.- செந்தில்குமார், ராமநாதபுரம்.

போத்தனுாரில் அடிக்கடி விபத்துபோத்தனுார், ஜி.டி., டேங்க் அருகில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.- பத்திரிநாத், போத்தனுார்.

குறிச்சியில் குவியும் கழிவுகுறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 பகுதியில், ஐயப்பன் கோவில் அருகே தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும்.- தங்கவேல், குறிச்சி.

யார் தலையில் விழுமோ?சிங்காநல்லுார், 63வது வார்டு, நடு வீதியில் சேதமடைந்த கம்பத்தை மின்பணியாளர்கள் பார்வையிட்டு பல மாதங்களாகியும், மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.- முருகன், சிங்காநல்லுார்.

100 அடி ரோட்டில் இடைஞ்சல்நுாறடி ரோடு, மேம்பாலத்துக்கு கீழே சர்வீஸ் ரோட்டில் தார்சாலை பணி முடிந்தும், அகற்றப்படாத தார் கலவை வண்டிகள், டின்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளன.- மனோகரன், சாய்பாபா காலனி.

கஸ்துாரி நகரில் கழிவுநீர் தேக்கம்சுந்தராபுரம், கஸ்துாரி நகர் முதல் தெருவில் குடியிருப்பு அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது.- உஷாராணி, சுந்தராபுரம்.

குப்பை அகற்றவில்லைதாளியூர் பேரூராட்சி, ஆர்.ஆர்., அப்பார்ட்மென்ட் முன் பல வாரங்களாக அகற்றாததால், தொட்டியில் குப்பை நிரம்பி வழிகிறது.- சண்முகவேல், கலிக்கநாயக்கன்பாளையம்.

மூடியில்லா டேங்கில் கழிவுகள்செல்வபுரம், என்.எஸ்.கே., விதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் டேங்கிற்கு மூடி இல்லாததால், தண்ணீரில் குப்பை, மண் விழுகிறது.- தங்கவேல், செல்வபுரம்.

திருச்சி ரோடெங்கும் குழிசிங்காநல்லுார், திருச்சி ரோட்டில் பல இடங்களில் உள்ள குழிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.- முருகன் காசி, சிங்காநல்லுார்.

நடைபாதை ஆக்கிரமிப்புதடாகம் ரோடு, கோவில்மேட்டில் கடைகளுக்கான பொருட்களை நடைபாதையில் வைத்துள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்.- சந்தர், கே.என்.ஜி.,புதுார்.

காந்தி மாநகரில் 'கும்மிருட்டு'பீளமேடு, காந்தி மாநகரில், கடந்த இரு மாதமாக தெருவிளக்கு எரியாததால், குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.- தினேஷ், காந்திமாநகர்.

அசோக் நகரில் நாய் தொல்லைகாளப்பட்டி, அசோக் நகர், பேஸ்-1 முதல் நான்கு வரையுள்ள குடியிருப்பு பகுதியில், நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது.- ரவீந்தரன், அசோக் நகர்.

அதிகாரிகள் அலட்சியம்ஆவாரம்பாளையம் ரோடு, தபால்நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வைக்கப்பட்ட குப்பைத்தொட்டியால், உயிரிழப்பு ஏற்பட்டும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.- சந்தியா, ஆவாரம்பாளையம்.

காமராஜர் ரோட்டில் விளக்கு பழுதுரெட்பீல்ட்ஸ், காமராஜர் ரோட்டில், விமானநிலைய கல்லுாரி எதிரே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.- முருகவேல், ரெட்பீல்ட்ஸ்.

குனியமுத்துாரில் மழைநீர் குளம்குனியமுத்துார், நிர்மலமாதா பள்ளி அருகில் குடியிருப்புகளுக்கு நடுவே குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.- வினோத்குமார், குனியமுத்துார்.

குற்றாலம் நகரில் கொசுப்பெருக்கம்கோவைப்புதுார், சிறுவாணி நகர் பின்புறம் குற்றாலம் நகரில், காலியிடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களால் மக்கள் பல்வேறு சிரமத்தை சந்திக்கின்றனர். கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.- கார்த்திக், கோவைப்புதுார்

தங்கம்மாள் வீதியில் குப்பைமயம்கணபதி, தங்கம்மாள் நகர், முதலாவது வீதியில் தினமும் குப்பை அகற்றாததால், வீதியெங்கும் குப்பைமயமாக காட்சியளிக்கிறது.- ஹரிகரன், கணபதி.

சீரமைக்கப்படாத ரோடுதிருச்சி ரோடு, சென்ட்ரல் ஸ்டூடியோ, கிருஷ்ணா காலனியில் பாதாள சாக்கடை குழாய் பதித்த பின், சேதமடைந்த சாலையை இன்னும் சீர்செய்யவில்லை.- நித்யா, ராமநாதபுரம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X