என்னுயிரே, இத்தனை நாளாய்... எங்கிருந்தாய்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
01:44

கோவை:கோவை வனக்கோட்டத்தில் நடத்திய கணக்கெடுப்பில், பல்வேறு அரிய வகை பறவைகள், பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டன.சுட்டித்தனமாய் சுற்றித்திரிவது மட்டுமல்ல; பார்க்கும் கண்களை ஆச்சரியத்தில் விரிய வைக்கும் சிறகுகளை கொண்டவை பட்டாம்பூச்சிகள். காலநிலை மாறுபாட்டாலும், சூழல் மாசுபாடுகளாலும், இவை அழியும் பறவையினங்கள் பட்டியலில் உள்ளன. நம்மை சுற்றி நுாற்றுக்கணக்கில் சுற்றித்திரிந்த பட்டாம்பூச்சிகளை, இன்று கணக்கெடுக்கும் நிலையில் உள்ளோம்.கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில், சமீபத்தில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 211 வகையான பறவைகள், 192 பட்டாம்பூச்சிகள் அடையாளம் காணப்பட்டன.'தி நேச்சர் அண்ட் பட்டர்பிளை சொசைட்டி' தலைவர் பாவனேந்தன் கூறியதாவது:கோவை வனத்துறை, டபிள்யு.டபிள்யு.எப்., இந்தியா, கோவை நேச்சர் சொசைட்டி மற்றும் எங்களது அமைப்பு இணைந்து பறவைகள், பட்டாம்பூச்சி கணக்கெடுப்பை நடத்தின. கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகத்திலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம், 15 குழுக்கள் ஈடுபட்டன. 66 இயற்கை ஆர்வலர்கள், 40 வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். கோவை, திருப்பூர், சென்னை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை ஆர்வலர்கள் வந்திருந்தனர்.கணக்கெடுப்பில், 211 பறவையினங்கள் கண்டறியப்பட்டன. இதில், 12 நீர்பறவைகள், 16 பார் கழுகுகள், ஏழு ஆந்தைகள் அடங்கும். மேலும், 21 வெளிநாட்டு பறவைகள் கண்டறியப்பட்டன. 192 பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. இதில், மிகவும் அரிய வகை பட்டாம்பூச்சியான சின்ஹால்ஸ் பைவ் ரிங் கண்டறியப்பட்டது. கோவை வனக்கோட்டத்தில் இப்பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டது இதுவே முதன்முறை. பல்வேறு பட்டாம்பூச்சிகளின் இருப்பிடமாக, கோவை வனக்கோட்டம் இருப்பது கணக்கெடுப்பில் தெரிந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X